×

கத்தார் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் அதிர்ச்சி

தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.அரை இறுதியில் ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகுத்துடன் (24வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். கடும் போராட்டமாக அமைந்த 2வது செட்டில் அவர் 7-6 (8-6) என டை பிரேக்கரில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பாடிஸ்டா 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். கத்தார் ஓபனில் 2 முறை சாம்பியனான ஜோகோவிச் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Qatar Open Tennis Jokovich , Qatar Open Tennis, Jokovich shocked
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...