×

உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நிலத்தில் சென்று நேரடியாக தடுத்து நிறுத்துவோம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மூன்று முறை தமிழக மின்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இந்த போராட்டம் துவங்கப்பட்டது. ஆனால், 4ம் தேதி இரவு வரை முதலமைச்சரிடமிருந்து எந்த விதமான செய்தியும் வரவில்லை. இதற்கிடையில், முன்னணி நிர்வாகிகளெல்லாம் சென்னைக்கு வந்துவிட்டநிலையில், காவல்துறையைப் பயன்படுத்தி நில உரிமையாளர்களான விவசாயிகளை மிரட்டி மின்கோபுரம் அமைக்கும் பணியில் தமிழக அரசும், பவர்கிரிட் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.

இது, தமிழக அரசின் விவசாயிகளுக்கு விரோதமான போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் கூடி இனிமேல் விவசாய விளை நிலங்களில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டால் நிலத்தில் சென்று நேரடியாக தடுத்து நிறுத்துவது, அதே நேரத்தில், அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்களுக்கு வாடகை, இனிமேல் நிறைவேற்ற இருக்கும் உயர்அழுத்த மின்திட்டங்களை கேபிள் மூலம் நிறைவேற்ற வேண்டுமென்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதலமைச்சர் கூட்டியக்க பிரதிநிதிகளை அழைத்தால் பேசி சுமுகமான தீர்வுக்கு தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ground , Let's go to the ground , build a high turret,directly block it
× RELATED போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாம்