கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் கைது

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஊத்தாங்கால் பகுதியை சேர்ந்த விஜய் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் மாணவி கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த மாணவியை விஜய் ஒரு பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆண்டாகொல்லை செல்லும் வழியில் ஏரிக்கரை அருகே உள்ள தைலந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே அங்கு ஏற்கனவே மறைந்திருந்த 3 வாலிபர்கள் மதுபோதையில் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி தனது வீட்டில் சம்பவத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி, என்எல்சி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு  செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து, விஜய் (23), முரளி (19), பிரபுராஜ் (22), வேல்முருகன் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கறம்பக்குடி அருகே தாய், மகளை தாக்கிய கல்லூரி மாணவர் கைது