×

ஊட்டி மலை ரயிலுக்கு வயது 100: சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஊட்டி: ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, மலை ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளுக்கு நேற்று இனிப்பு வழங்கப்பட்டது. ஊட்டி மலை ரயில் செல்ல கடந்த 109 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே (27.4 கி.மீ.,) பாதை அமைக்கப்பட்டது. பின் ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டிக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு, அதன் பின் கடந்த 1909ம் ஆண்டு மலை ரயில் இயக்கப்பட்டது. ஆசிய கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதையும், மிகவும் செங்குத்தான மலைப்பாதையில் இந்த ரயில் சென்று வருகிறது. இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்த நிலையில், 2018-19 ஆண்டு முழுக்க பல்வேறு விதமான கொண்டாடங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ரயில் பஸ் இயக்க சோதனை ஓட்டம், ரயில் பாதையில் பராமரிப்பு பணி மற்றும் சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியை காணும் வகையில், முட்புதர்களை அகற்றியது, சிறப்பு ரயில் இயக்கம் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், மலை ரயில் 100 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் நேற்று ஊட்டி ரயில் நிலையத்தில் மலை ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளை வரவேற்று, இனிப்புகள் வழங்கப்பட்டது. அமைப்பின் அறங்காவலர் நடராஜ் தலைமை வகித்தார். ஸ்டேஷன் மாஸ்டர் பிரமோத் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ooty Mountain Rail , Ooty mountain train
× RELATED ஒன்பது மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் இயக்கம்