×

தோகைமலை அருகே 100 நாள் வேலையில் முறைகேடு வருகைபதிவேட்டை அதிகாரி ஆய்வு

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள முத்து பாலகிரி  கிராமத்தில் 100நாள் திட்டத்தில் பணி செய்யும் பணியாளர்கள் வேலைக்கு வராமல்  பணம் எடுத்து கொள்வதாக ஒன்றிய ஆணையர் ராணிக்கு புகார் வந்தது. இதனையடுத்து பொருந்தலூர் ஊராட்சியில் நடைபெறும் 100நாள் பணிகளை நேற்று அவர் திடீர் ஆய்வு செய்தார். தெலுங்கப்பட்டி  அருகே முத்துபாலகிரியில் உள்ள ஆற்றுவாரியில் 100நாள் பணியளர் கள் செய்யும்  இடத்திற்கு நேரில் சென்று வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர்  100நாள் அட்டை வைத்திருக்கும் நபர்கள் கண்டிப்பாக பணிக்கு வந்தால் மட்டுமே  ஊதியம் வழங்கப்படும்.வேறொரு நபர்களிடம் தங்களுடைய 100நாள் அட்டை யை கொடுக்க  கூடாது. பணிக்கு வந்து வருகை பதிவேட்டில் பதிந்தவுடன் வேறு எங்கும்  செல்லக் கூடாது.

உடல்நிலை சரியில்லாமல் போனால் மட்டும் அதற்கான காரணத்துடன் செல்ல வேண்டும். வேலைக்கு வராமல் பதிவேட்டில் பதிந்து ஊதியம்  வாங்குவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக 100நாள் அட்டையை பறிமுதல்  செய்யப்படும். மேலும் பணித்தள பொறுப்பாளர் பணியாளர்களின் வருகையை  பதிவேட்டில் பதிவு செய்தவுடன் பணியாளர்களையும், அவர்கள் செய்யும்  பணிகளையும் கண்காணிக்க வேண்டும். இதற்கு மாறாக பொறுப்பாளர்கள் நடந்த  கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்  போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், 100 நாள் பணிகளின் துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thodigamalai , 100-day work, abuse
× RELATED தோகைமலை பகுதியில் தேர்தல் விதிமுறை...