×

146ஆண்டுகளுக்கு பின் நார்த்தாமலையில் சுனைலிங்கம் தரிசனம்

* வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

புதுக்கோட்டை : நார்த்தாமலையில் 146 ஆண்டுகளுக்குப் பிறகு சுனைலிங்கம் தரிசனம் செய்வ தற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  நார்த்தாமலையை சுற்றி மேலமலை, கோட்டை மலை, கடம்பர்மலை, உவச்சன்மலை,  ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, மண்மலை, பொன்மலை எனப் பல மலைகள் உள்ளன. சுனை  லிங்கம் உள்ளிட்ட இந்த மலையில், பல்வேறு வரலாற்று நினைவு சின்னங்கள் உள்ளன.  இந்தப்பகுதி, தொல்லியல் துறை யின் பொறுப்பில் இருக்கும் பகுதியாகும்.

இங்கிருக்கும்  வரலாற்று சின்னங்கள், கி.பி 7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு  வரையிலான பழைமை வாய்ந்தவை என கூறப்படுகிறது. இங்கு மேலமலைப் பகுதியில்  இருக்கும் விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்குக் கீழ் ஒரு சுனை உள்ளது.  சுனைக்கு மேற்பகுதியில் தொண்டைமான் குறித்த இரண்டு கல்வெட்டுகள்  காணப்படுகின்றன. அந்த சுனையினுள் ஒரு லிங்கம் இருப்பதாகவும், இதற்கு முன்  அந்த லிங்கத்தை 1872-ம் வருடம், மக்கள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்த  கல்வெட்டுச் செய்தியும் இங்கு காணப்படுகிறது. அதன்பின் இந்தசுனை,  எப்போதும் நீர் நிரம்பியே காணப்படும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்,  வறட்சியின் காரணமாக விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பொருட்டு இந்தசுனை நீரை  இறைக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதைப் பாதியிலேயே தொல்லியல்துறை தடுத்து  நிறுத்தி விட்டது. அதன்பின், இப்போது தொல்லியல் துறை அனுமதியோடு  மோட்டார்களை கொண்டு சுனை நீரை இறைக்கும் பணி தீவிரமாக நடந்தது.

புத்தாண்டு  அன்று கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் சுனையில் இருக்கும் லிங்க த்தை  பார்க்க குவிந்தனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  வந்த பொதுமக்களும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் கூட தொடங்  கினர்.  ஆனால் சுனையில் இருந்த தண்ணீர் சேறும் சகதியுமாக இருந்ததால்  தண்ணீர் வெளி யேற்றும் பணி முடியவில்லை. இதனால் தொடர்ந்து பணி நடை பெற்று  வந்த நிலை யில் நேற்று காலை முதலே தண்ணீரை முழுவதுமாக அகற்றி உள்ளே சுத்தம்  செய்யும் பணிகள் முடிந்து மதியம் லிங்கம் தரிசனம் நடை பெற்றது.

alignment=


இதனையடுத்து  திரளான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் குவிய தொடங்கினர். தொல்லியல்  துறை, அனுமதி மற்றும் வழிபாடு வரையிலான செயல்களை, ‘யாதும் ஊரே யாவரும்  கேளிர்’ அமைப்பை சேர்ந்த பார்த்திபன், முருகன், எடிசன் ஆகியோர்  முன்னெடுத்து செய்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன், சித்தன்னவாசலில்  இதே போன்ற ஒரு சுனைலிங்க வழி பாட்டை நிகழ்த்தினர். 146 ஆண்டுகளுக்குப்  பின் வெளிப்படும் லிங்கத்தைக் கண்டு வழிபட உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு  பக்தர்கள் ஆவலுடன் குவிந்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Northamalai, sunailingam, Darshan,Pudukkottai
× RELATED தனியார் பள்ளிகளில் 25 சதவீத...