×

நேர்மையாக விளையாடிய ராகுல்! பாராட்டிய நடுவர்

சிட்னி :  இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியின் புஜாரா மற்றும் பன்ட் ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.


இந்த நிலையில், ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று காலை, இந்திய அணியின் ஜடேஜா 15-வது ஓவரை வீசினார். இன்றைய தினத்தில் தனது முதலாவது பந்தை வீச ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹாரிஸ், க்ரீஸை விட்டு இறங்கி வந்து மிட்-ஆன் நோக்கித் தூக்கி அடித்தார்.  

alignment=



தூரமாகச் சென்ற அந்தப் பந்தை இந்திய அணியின் கே.எல் ராகுல் தாவிப் பிடித்தார். கேட்ச் பிடிக்கப்பட்டதைப் பார்த்த ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் துள்ளிக்குதித்தனர். அப்போது கே.எல் ராகுல், அது கேட்ச் இல்லை எனவும், தரையில் பட்டபின்னர்தான், பிடித்ததாகவும் உடனடியாக தெரிவித்தார்.

alignment=


உடனடியாக டி.வி-யில் காட்டப்பட்ட ரீப்ளேயிலும் அது தெளிவாக தெரிந்தது. உடனடியாக பும்ராவும் வந்து ராகுலின் முயற்சியைப் பாராட்டினார். அப்போது அம்பையராக இருந்த இயன் கவுல்ட், ராகுலின் நேர்மையை கைதட்டி பாராட்டினார். அப்போது ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

alignment=



ராகுலுக்கு இணையத்திலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தனக்கு அவுட் இல்லை எனத் தெரிந்திருந்தாலும், அவுட் எனச் சொல்லி மூன்றாவது அம்பையரின் முடிவுக்காகச் செல்லும் வீரர்கள் மத்தியில் இது நல்ல முன் உதாரணம் ராகுல் எனவும், டி.ஆர்.எஸ் வந்தாலும் நேர்மையான கிரிக்கெட்டுக்கு முன்னால், அது தேவையற்றது ஆகிறது எனவும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,arbitrator , Kl Rahul, India, australia, honest, catch
× RELATED கோட்சேவை பின்பற்றுபவர்களுக்கு...