பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு

சென்னை: பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 4 நிறுவனங்களும் வரி ஏய்ப்புக்காக இரண்டு வகையான கணக்குகளை பராமரித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி அமல்படுத்திய போது, ஓட்டல்களுக்கு 18 சதவிதம் ஜிஎஸ்டி வரி விதித்தது. இதற்கு பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து மத்திய அரசு ஓட்டல்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரிவிகிதத்தை பாதியாக குறைத்தது. ஆனால் சில ஓட்டல்கள் பழைய ஜிஎஸ்டி வரி விதிப்பின்படி வாடிக்கையாளர்களிடம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வகையில், ெசன்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் போலி கணக்குகள் மூலம் பல கோடி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு ெசய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நேற்று முன்தினம் முதல் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு சொந்தமான தலைமை அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பல கோடிக்கு 4 நிறுவனங்களும் வரி ஏய்ப்பு ெசய்ததற்கான ஆணவங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.  கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விசாரணை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. இதில், வருமான வரித்துறையிடம் 4 நிறுவனங்களும் தாக்கல் செய்த ஆவணங்களையும், சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களையும் வைத்து சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.

அப்போது, 4 நிறுவனங்களும் மத்திய அரசுக்கு வரி செலுத்துவதற்கான தனியாக ஒரு கணக்கும், வருமானத்திற்கான ஒரு கணக்கும் பராமரித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் 4 நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு வரை நீடித்த இந்த விசாரணையில், பல தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நிறுவன உரிமையார்களிடமும் பெற்றதாக கூறப்படுகிறது. விசாரணை முடிவுக்கு பிறகுதான் எத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்பது தெரியவரும் என்று வருமான வரித்துறை வட்டாரத்தில் ெதரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>