×

நீதிமன்ற வளாகத்தில் போலீசாரிடம் வாக்குவாதம் 2 வழக்கறிஞர்கள் மீது வழக்கு

சென்னை: புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிகளை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 வழக்கறிஞர்கள் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்துள்ளனர். புழல் மத்திய சிறையில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 26 விசாரணை கைதிகளை கடந்த 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அர்ஜூனன் தலைமையில் 32 காவலர்கள் பாதுகாப்பாக எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஆனந்த் (எ)ஆனந்தபாபு மற்றும் விஜயகுமார் ஆகியோர் கைதிகளை தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பாதுகாப்புக்கு வந்த போலீசார், கைதிகளை தொட்டு பேசாதீர்கள் என்று கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, வழக்கறிஞர்கள் இருவரும் போலீசாரை ஒருமையில் பேசியும், அப்போது செல்போனில் வீடியோ எடுத்த போலீசாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஆயுதப்படை காவலர் மகேஷ்குமார் எழும்பூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்படி போலீசார் காவலரை பணி செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ஆனந்த் (எ) ஆனந்தபாபு மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் மீது ஐபிசி 294 (பி), 353, 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் வழக்கறிஞர்களிடையே பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lawyers ,courtroom , Court complex, argument, case
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா