×

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

* உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிப்பு
* மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்

சென்னை: உயர்மின் கோபுரம் திட்டத்தை ரத்து செய்ய கோரி, இரண்டாவது நாளாக திருமண மண்டபத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பல கட்ட பேச்சுவார்த்தைகள்  தோல்வி அைடந்ததை அடுத்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை போராட்டம் நீடித்ததால் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்ேடாம் என்று கூறிவிட்டனர். அதை தொடர்ந்து போராட்டம் நடந்த பகுதியில் நூற்றுக்கும் ேமற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பிறகு சிறிது நேரத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய 300 விவசாயிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் போலீசார் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இரண்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் நேற்று காலை விடுவித்தும், ‘எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் வீட்டிற்கு செல்லமாட்டோம்’ என்று கூறி திருமண மண்டபத்திலேயே இரண்டாவது நாளாக அனைவரும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு நேரில் சென்று, ஆறுதல் கூறி அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

திருமண மண்டபத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு போலீசார் உணவு, குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் கெடுபிடியில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு உடனே அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என்று போலீசாருக்கும் அரசுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farms ,waiter strike , Crops, high raincoats, farmers, wait stand
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...