×

அமெரிக்காவுக்கு போட்டியாக வெடிகுண்டுகளின் தாயை உருவாக்கி சீனா அதிரடி

பீஜிங்: அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுக்கு இணையான வெடிகுண்டை சீனா சொந்தமாக உருவாக்கி சோதித்து பார்த்துள்ளது.  அமெரிக்க ராணுவத்திடம் ஜிபிய-43/பி என்ற மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு (எம்.ஓ.ஏ.பி) உள்ளது. உ,லக நாடுகளில் உள்ள வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாயாக இது அழைக்கப்படுகிறது. இதற்கு போட்டியாக சீனா தற்போது பெரிய வெடிகுண்டை உருவாக்கி தனது எச்-6கே போர் விமானத்தில் இருந்து வீசி சோதித்துள்ளது. இந்த குண்டு விமானத்தில் இருந்து வீசி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதற்கும் அமெரிக்காவை போல், வெடிகுண்டுகளின் தாய் என சீன அடை மொழி வைத்துள்ளது.

இது குறித்து சீனாவின் ராணுவ நிபுணர் வே டோங்சு கூறுகையில், “இந்த வெடிகுண்டின் நீளம் 5 முதல் 6 மீட்டர் உள்ளது. இது கட்டிடங்கள் மற்றும் ராணுவ தளங்களை தரைமட்டமாக்கும் திறன் படைத்தது. அமெரிக்க குண்டை ராணுவ சரக்கு விமானத்தில்தான் கொண்டு செல்ல முடியும். ஆனால், சீன குண்டை போர் விமானத்திலும் எடுத்துச் செல்ல முடியும்” என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,America , US ,Bombs, China
× RELATED சீனா குறித்த மோடியின் பதில்...