×

முல்லைப் பெரியாறில் புதிய அணை ஆய்வுக்கு ஒப்புதல் மத்திய அரசு, கேரளா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்

புதுடெல்லி: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட ஆய்வு பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதற்கு எதிராக மத்திய அரசு மற்றும் கேரள அரசு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு  தெரிவித்துள்ளது. இதில் அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணையில் இருந்து வருகிறது.

அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் புதிய அனை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது இந்த நிலையில் புதிய அணை தொடர்பாக கேரள அரசு தமிழகத்திடம்  வரைவு அறிக்கை  தாக்கல் செய்ய தேவையில்லை என மத்திய அரசு தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது.  அதில்,”  முல்லைபெரியாரில்  கேரளா புதிய அணை கட்ட முயற்சிப்பதால்  சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் சிகே.மிஸ்ரா மற்றும் கேரள அரசு   மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும்  என   குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த   மனு விரைவில்  விசாரணைக்கு வரவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,dam ,Mullaiperiyar ,Kerala , Mullai Periyar, New Dam Research, Central Government, Kerala, Supreme Court, Tamilnadu Government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...