×

திமுக கூட்டணி கட்சிகளின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி

மதுரை: திமுக கூட்டணி கட்சிகளின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஐகோர்ட் கிளை அனுமதி தந்துள்ளது. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதாஜீவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும், சிறப்பு சட்டம் இயற்றக்கோரியும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர், தூத்துக்குடியில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம்.
தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் எதிரில் மாலையில் அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தூத்துக்குடி போலீசில் மனு அளித்தோம். ஆனால் போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர்.

மக்களின் உணர்வுகளையும், எங்களின் கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில்தான் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. அமைதியான முறையில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் இந்த போராட்டம் நடைபெறும். எனவே போராட்டத்திற்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்களது போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, விளாத்திகுளம் மீனாட்சியம்மன் கோயில் திடலில், வரும் ஜன.19ம் தேதி மாலையில் போராட்டம் நடத்த அனுமதித்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alliance ,protest ,DMK , Alliance ,sterile protest ,f DMK allies
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி