×

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் : முத்தரசன் உறுதி

நெல்லை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 94வது அமைப்பு தின சிறப்பு பேரவை கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

2019ம் ஆண்டு, மோடி ஆட்சிக்கும், பாடி ஆட்சிக்கும் விடை கொடுக்கும் ஆண்டாகவே அமையும். பாஜ தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் 5 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுகிறது. இவர்கள் ஆட்சியின்போது பொதுமக்கள் பல துன்பத்தை அனுபவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட கறுப்பு பணத்தை பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதை நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறி உள்ளது. தேர்தல் ஆணையம் மக்களின் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Tiruvarur ,Mutharasan , Thiruvarur seat bypoll ,DMK wins, Mutharasan confirmed
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது