×

அதிமுக ஆட்சியை காப்பாற்ற யாருக்கும் அடிமை சாசனம் எழுதித்தரவில்லை

அதிமுக அரசு யாருக்கும் கட்டுப்பட்டது இல்லை. இந்த ஆட்சியை காப்பாற்ற யாருக்கும் அடிமை சாசனம் எழுதிக் ெகாடுக்கவில்லை என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: கஜா புயலால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முதல்வர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்க வேண்டும்.
புயல் வந்தாலும் பாதிக்காத வகையில் 5 முதல் 10 அடி உயரத்தில் காய்க்கும் தென்னை கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு, விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். விவசாய நிலமே இல்லாதவர்கள்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

தமிழகம் முன்னேற விடாமல், சாலை, துறைமுகம் அமைக்கவிடாமல் மக்களை தூண்டிவிட்டு போராடுகிறார்கள். இது நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லது இல்லை. மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறுகிறார்கள். ஜெயலலிதாவின் அரசு யாருக்கும் கட்டுப்பட்டது இல்லை. இந்த ஆட்சியை காப்பாற்ற யாருக்கும் (மத்திய பாஜ அரசுக்கு) அடிமை சாசனம் எழுதிக் ெகாடுக்கவில்லை. தற்போதும் 37 அதிமுக எம்பிக்கள் மேகதாது பிரச்னையில் சிறப்பாக போராட்டம் நடத்தி பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார்கள். இப்படியிருக்கும்போது எங்களை எப்படி அடிமை என்று சொல்ல முடியும்? நிச்சயமாக மேகதாதுவில் மாற்று அணை கட்ட விட மாட்டோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK , slave should not be written ,ave the AIADMK regime
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...