×

உச்சநீதிமன்ற உத்தரவின்படியே மேகதாது அணை விவகாரம் கையாளப்படுகிறது : ஈஸ்வரப்பா பேட்டி

மதுரை: மேகதாது அணை விவகாரத்தில் சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்கி வருவதாக கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என ஈஸ்வரப்பா கூறியுள்ளார். இரு மாநிலத்தில் உள்ளவர்களும் சகோதர உணர்வுமிக்கவர்களாகவே உள்ளனர்.

ஆனால் சில அரசியல்வாதிகள் தான் தங்களது அரசியல் லாபத்திற்காக இவ்விவகாரத்தில் தேவையில்லாமல் உள்நுழைந்து பெரிதாக்கி பிரச்சனையை உண்டாக்குகின்றனர் என சாடியுள்ளார். சட்டரீதியாக உச்சநீதிமன்ற உத்தரவின்படியே மேகதாது விவகாரத்தை கையாண்டு வருவதாக குறிப்பிட்டார். கடந்த 800 ஆண்டுகளாக சபரிமலைக்கு பெண்கள் செல்லாததை சுட்டிக்காட்டிய ஈஸ்வரப்பா, உச்சநீதிமன்றம் மக்களின் நம்பிக்கை, பக்தி உள்ளிட்வற்றில் தலையிட கூடாது என கேட்டுக்கொண்டார். இந்து தர்மங்களுக்கு எதிராக கேரள அரசு செயல்பட்டால் அதற்கான பின்விளைவுகளை எதிர்காலத்தில் அவர்கள் நிச்சயம் சந்திப்பார்கள் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,interview ,Easwarappa ,Meghatadu Dam , eghatad dam, Eswarappa interview, Karnataka
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...