×

உடன்குடி, குலசேகரன்பட்டினத்தில் திறந்தவெளியில் தின்பண்டங்கள் விற்பனை

உடன்குடி: உடன்குடி, குலசேகரன்பட்டினத்தில் திறந்த வெளியில் வைத்து தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடன்குடி, குலசேகரன்பட்டினம் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். மேலும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் இனிப்புகள் வாங்கி செல்வது வழக்கம் இதனால் திண்பண்ட கடைகளில் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
இங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் முறையாக பராமரித்து விற்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திறந்த வெளியில் வைத்து திண்பண்டங்கள் விற்பனை செய்வதால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

விழாக்காலங்களில் மட்டுமே ஆய்வு, சோதனை என்ற பெயரில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,சுகாதார அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். பிற நேரங்களில் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.இதனால் திண்பண்டங்கள், உணவுப்பொருட்கள் அலட்சியத்துடன் தயாரித்து விற்பனை ஜரூராக நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ள
னர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kulasekarapattinam ,Udangudi , Snacks, sale, indangudi, kulasekarappunam
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது