ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு தீவிரம்... போட்டிக்கு தயாராகும் காளைகள், மாடுபிடி வீரர்கள்

தேனி: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை அதன் உரிமையாளர்கள் தயார்ப்படுத்தி வருகின்றனர். கொம்புகளை சீர்மைபடுத்தி வர்ணம் தீட்டுதல், மணலில் குத்துவது, மாடுபிடி வீரர்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகளில் காளைகளை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளனர்.

காளைகளோடு சேர்ந்து மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால் உற்சாகமடைந்துள்ள திம்மரசநாயக்கனூர் கிராம மக்கள் தங்களது காளைகளுக்கு மும்மரமாக பயிற்சி அளித்து வருகின்றனர். அவனியாபுரத்தில் வரும் 15ம் தேதி, பாலமேடு 16ம் தேதி மற்றும் அலங்காநல்லூரில் 17ம் தேதி நடக்க உள்ளது.

இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்துவற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. முதல்கட்டமாக பாலமேடு, அலங்காநல்லூர் பகுதி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல்திறன் தகுதி சான்று வழங்கப்பட உள்ளது. காளைகள் சுமார் 120 செமீ உயரம், குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சம் 8 வயது, கொம்பின் கூர்மை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: