×

வட கொரிய தூதர் திடீர் தலைமறைவு : இத்தாலியிடம் அடைக்கலம் கேட்கிறார்

சியோல்: வடகொரிய தூதர் ஜோ சாங் கில், தனது குடும்பத்துடன் இத்தாலியில் தலைமறைவாகி உள்ளார். அவர், அந்நாட்டு அரசிடம் அடைக்கலம் கேட்டிருப்பதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. இத்தாலிக்கான வட கொரியா செயல் தூதராக ஜோ சாங் கில் (48) கடந்தாண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார். இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வடகொரிய தூதரகத்தில் அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் தங்கியிருந்தார். அவரது பதவிக் காலம் கடந்த நவம்பருடன் முடிந்த நிலையில், தூதரகத்திற்கு எந்த தகவலும் தராமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜோ சாங் கில், இத்தாலி அரசிடம் அடைக்கலம் கேட்டுள்ளதாக தென் கொரியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடு ஒன்றில் ஜோ சாங் தனது குடும்பத்திடம் தங்கியிருப்பதாகவும், இத்தாலி அரசின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன், கடந்த 2016ல் இங்கிலாந்துக்கான துணை தூதராக இருந்த தயே யோங் ஹோ, பதவிக்காலம் முடிந்ததும் நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார். பொதுவாக, வடகொரிய தூதர்கள் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். பதவிக் காலம் முடிந்ததும் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்புவதில்லை. காரணம், வடகொரியாவில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே, தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, சில தூதர்கள் வடகொரியா திரும்பாமல், பணியாற்றிய நாட்டிலேயே அகதியாக அடைக்கலம் தேடிக் கொள்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : North Korean ,ambassador ,Italy , North Korean, ambassador sudden outrage, Asks for refuge from Italy
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...