×

ரஷ்யாவில் பரிதாபம்: குடியிருப்பு இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

மாஸ்கோ: ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் நகரில், 10 மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில், இரு தினங்களுக்கு முன்பு சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த அதிர்வில் 48 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்டோரை காணவில்லை என சம்மந்தப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கி சுமார் 36 நேரத்துக்கு பின்னர் 11 மாத ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா, வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russia ,residence ,collapse , Poverty , Russia, 39 killed , collapse
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...