×

வரலாற்றில் முதன்முறையாக விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசாவின் விண்கலம் சாதனை

வாஷிங்கடன் : பூமியில் இருந்து 110 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசாவின் விண்கலம் சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இதில் பின்னு என்று அழைக்கப்படும் விண்கல்  பூமியில் இருந்து 110 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. அதனை ஆய்வு செய்ய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா ஓசிரிஸ் -ரேக்ஸ் என்ற செயற்கைகோளை அனுப்பியது. இந்நிலையில் பல ஆண்டுகளாக பயணம் மேற்கொண்ட அந்த விண்கலம் பின்னுவின் சுற்றுப்பாதையில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

இந்த தகவலை ஓசிரிஸ் -ரேக்ஸ் செயற்கைக்கோளை தயாரித்த அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி டான்டி லாரெட்டா தெரிவித்துள்ளார். இதுவரை எந்த ஒரு விண்கல்  அருகிலும் செயற்கைகோள் இவ்வளவு நெருக்கமாக சென்றதில்லை என்று கூறிய டான்டி, பின்னு விண்கல் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு சக்தி கொண்டது. இதனால்தான் அதில் செயற்கைகோள் நுழைவதற்கு சாத்தியமானது என்று கூறியுள்ளார்.

அடுத்த மாதம் இறுதியில் இன்னும் நெருக்கமாக சென்று அந்த விண்கல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை கோள் ஒரு விண்கல்லின் சுற்றுப்பாதையை மிக நெருக்கத்தில் அதாவது 1.75 கி.மீட்டர் நெருக்கத்தில் சென்றடைந்துள்ளது  இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் ரோசட்டா விண்கலம் ‘காமட்-67’ என்ற குறுங்கோளை 7 கி.மீட்டர் தூர சுற்றுப்பாதையில் நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NASA ,time , Meteorite, NASA, Spacecraft, Adventure, Backward, Earth, Osiris-Rakes, Satellite
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்