×

மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு

மஞ்சூர்: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துஉள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால் மட்டம்,  கிட்டட்டிமட்டம், உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் சமீப காலமாக  காட்டெருமை நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

இவ்வாறு வரும்  காட்டெருமைகள் விவசாய நிலங்களில் பியிரிடப்பட்டுள்ள உருளைகிழங்கு, கேரட்,  பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட வற்றை  சேதப்படுத்துவதுடன் தோட்டங்களையும் நாசம் செய்து வருகின்றன. மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும்  காட்டெருமைகளால் தேயிலை தோட்டங்களுக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சம்  அடைகின்றனர். இதனால் தேயிலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே  காட்டெருமையின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என  வனத்துறையிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tea plantation ,Manjur , Mancur, tea, wild cattle
× RELATED உப்பட்டி சுகாதார நிலையம் அருகே தெருவிளக்குகள் இல்லாததால் பாதிப்பு