×

நார்த்தாமலையில் 146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் சுனைலிங்கம் : வழிபட தயாராகும் பக்தர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் 146 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்படும் லிங்கத்தைக்  வழிபட பக்தர்கள் தயாராகி வருகின்றனர். புதுக்கோட்டை  மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்று நார்த்தாமலை. இந்த  பகுதியில் மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை,  பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை எனப் பல மலைகள் உள்ளன. சுனை லிங்கம்  உள்ளிட்ட இந்த மலையில்,  பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்தப் பகுதி, தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கும் பகுதியாகும்.

இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி 7ம் நூற்றாண்டிலிருந்து 9ம்  நூற்றாண்டு வரையிலான பழமை இங்கு மேலமலைப் பகுதியில் இருக்கும் விஜயாலய  சோழீச்சுரம் கோயிலுக்குக் கீழ் ஒரு சுனை உள்ளது. சுனைக்கு மேற்பகுதியில்  தொண்டைமான் குறித்த இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அந்தச் சுனையினுள்  ஒரு லிங்கம் இருப்பதாகவும், இதற்கு முன் அந்த லிங்கத்தை 1872ம் வருடம்,  மக்கள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்பின்னர்,  இந்தச் சுனையில் எப்போதும் நீர் நிரம்பியே காணப்படும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்,  வறட்சியின் காரணமாக விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பொருட்டு இந்தச் சுனை நீரை இறைக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதைப் பாதியிலேயே தொல்லியல் துறை  தடுத்து நிறுத்தி விட்டது. அதன்பின், இப்போது தொல்லியல் துறை அனுமதியோடு  மோட்டார்களைக் கொண்டு சுனை நீரை இறைக்கும் பணி தொடங்கியுள்ளது. சுமார் 20  அடிக்கும் மேல் ஆழம் இருக்கும் இந்தச் சுனை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களுக்குள் தண்ணீர் முழுவதும்  வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 146 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்படும் லிங்கத்தைக் கண்டு வழிபட பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Devotees , Narthamalai, Chuningalingam, devotees
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்