பெங்களூரில் நடிகர்கள் புனித் ராஜ்குமார், யஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

பெங்களூரு : பெங்களூரில் உள்ள பிரபல நடிகர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் மற்றும் கேஜிஎப் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் யஷ் ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும், பிரபல நடிகமான புனித் ராஜ்குமாரின் வீடு பெங்களூருவில் உள்ளது. இங்கு இன்று காலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 60 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல சமீபத்தில் வெளியான கேஜிஎப் பட ஹீரோ யஷ் வீட்டிலும் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல மொழிகளில் வெளியானி கேஜிஎப் படம் ரூ.150 கோடி வருமானத்துடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சோதனை நடைபெற்று வருவது கன்னட திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலையடுத்து வருமான வரி சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>