×

பேரவையில் இன்று கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்

* 8ம் தேதி வரை கூட்டம் * அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

சென்னை: பேரவையில் இன்று கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. முன்னதாக கூடிய பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் வருகிற 8ம் தேதி வரை பேரவை கூட்டம் நடத்துவது என்று  முடிவு  செய்யப்பட்டது.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கவர்னர் பன்வாரி லால் புரோகித் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். கூட்டம் முடிந்த பிறகு பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று பகல் 12  மணிக்கு நடந்தது. பேரவை தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முஸ்லிம் லீக் தலைவர் அபுபக்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் வருகிற 8ம் தேதி வரை  பேரவை கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:3ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடியதும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்மநாராயண் சிங், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்,  நெல் ஜெயராமன், டாக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோரது மறைவுக்கும் கஜா புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பேரவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் முன் னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் கருணாநிதி மறைவுக்கும் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவுக்கும்  இரங்கல் தெரிவிக்கும் தீர்மான ங்களை முன்மொழிகிறார். அதைத் தொடர்ந்து பேரவை ஒத்திவைக்கப்படுகிறது.  4ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்கு கிறது. 5ம் தேதி விவாதம் தொடர்ச்சி, 6ம் தேதி விடுமுறை, 7ம் தேதி விவாதம் தொடர்ச்சி, 8ம் தேதி 2018- 19ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படுகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீது பதிலுரை இடம் பெறுகிறது.2018 -19ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் இன்றி வாக்கெடுப்பு, சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தல் நிறைவேற்றுதல், ஏனைய  அரசினர் அலுவல்கள் இடம் பெறும். பேரவை கூடும் நாட்களில் காலை 10 மணிக்கு கேள்வி பதில் இடம் பெறும்.
 இந்த தகவல்களை பேரவை தலைவர் தனபால் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karunanidhi , Today, assembly, Morning resolution , Karunanidhi
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...