×

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 4 மாஜிஸ்திரேட், 10 டாக்டர்கள் உள்ளிட்ட சாட்சிகளிடம் 18ம் தேதி முதல் விசாரணை: மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது

சென்னை: சென்னை, அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்டர் மேன், லிப்ட் ஆபரேட்டர், வாட்ச் மேன் உள்ளிட்டேர் பல மாதங்களாக மயக்க மருந்து  கொடுத்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, 17 பேரை கைது செய்தனர்.போலீசார் கைதான 17 பேர் மீதும் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கில் போலீசார் தரப்பில் 28 பெண்கள், அடையாள அணிவகுப்பு, வழக்கை விசாரித்தவர்கள் என 4 மாஜிஸ்திரேட், சிறுமியை பரிசோதித்த  10 டாக்டர்கள் என மொத்தம் 81 சாட்சிகளின் பட்டியல் தயாரித்து கொடுக்கப்பட்டது. பின்னர் கடந்த வாரம் 17 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அப்போது அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.  அதன்படி வழக்கு விசாரணை நேற்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது, நீதிபதி சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி, முக்கிய சாட்சிகள் ஒவ்வொருவரிடமும் வரும் 18ம் தேதி முதல் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்துவார்கள். மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய வழக்கு என்பதால், தினமும் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trial ,women ,doctors ,magistrates , case,molestation girl, The witnesses, including ,Women's Court
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ