×

சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க கோரி அவசர வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட  பொது நலன் வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மேகாலயா மாநிலத்தில் சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கம் ஒன்றில் கடந்த டிசம்பர் 13ம் தேதி, அருகில் உள்ள ஆற்றில் இருந்து  வெள்ளம் புகுந்தது. இதில், சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்கள் இறந்திருக்கலாம் என்று  கூறப்படுகின்றது. இந்நிலையில் சுரங்கத்தில் க்கியவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிருடன்  மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். இறுதி சடங்கு செய்வதற்காக அவர்களது சடலங்களையாவது  மீட்டுக்கொடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஆதித்யா என்.பிரசாத் என்பவர் உச்ச  நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார்.  சுரங்கத்தில் நிலையான செயல் நடைமுறையை மேற்கொள்வதற்கு மத்திய அரசு  மற்றும் இதர அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன்  கோகாய்,  நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அவசர வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : miners ,Supreme Court , Emergency,demanded, restore miners, Supreme Court
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...