×

இந்தாண்டு முதல் தகவல் கிடைக்கும் சுவிஸ் வங்கிகளில் பணத்தை குவித்துள்ள இந்தியர்கள் யார்?: மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவல் இந்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு கிடைக்கும்’’ என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
 இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பலர் தங்கள் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் சட்ட விரோதமாக டெபாசிட் செய்து வருகின்றனர். அவ்வாறு டெபாசிட் செய்துள்ளவர்களின் பணம் மீட்கப்படும் என பாஜ தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது: சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரம் இந்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு கிடைக்கும். நமது வேண்டுகோளுக்கு இணங்கவோ அல்லது தானாகவோ இந்த தகவலை சுவிட்சர்லாந்து அரசு வழங்கும். இதில், லஞ்ச ஊழலில் சிக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரமும் இடம் பெற்றிருக்கும். கடந்த 2016ம் ஆண்டு இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே செய்து கொண்ட வரி தொடர்பான ஒப்பந்தத்தின்படி தானாகவே இந்த தகவல் பரிமாறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indians ,banks ,Swiss , Indians, money, Swiss bank
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...