×

பேரையூர் பகுதியில் மலை நெல்லிக்காய் விளைச்சல் பாதிப்பு

பேரையூர்: பேரையூர் பகுதியில் பருவ மழை தவறியதால் மலை நெல்லிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் மலை நெல்லிக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் நெல்லிக்காய்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் விற்பனை செய்ய அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மலை நெல்லிக்காய்களை மகசூல் செய்யும் பணி தீவீரமாக நடந்து வருகிறது. பறிக்கப்பட்ட நெல்லிக்காய்கள் தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கேற்ப ரூ.5 முதல் 15 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை சரி வர பெய்யாததால், மலை நெல்லிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய விலை கிடைத்தும், விளைச்சல் குறைந்ததால் நெல்லிக்காய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயி தங்கத்துரை கூறுகையில், இப்பகுதியில் சரிவர மலை பெய்யாததால், மலை நெல்லிக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. தொடர்ந்து மழையில்லாமல் போனால், விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Peraiyur , Leash, mountain gooseberry, yield
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது