×

சீனாவுடன் இணைய மறுத்தால் ராணுவத்தை அனுப்பப் போவதாக தைவானுக்கு சீன அதிபர் பகிரங்க மிரட்டல்

பெய்ஜிங் : தைவான் மீண்டும் சீனாவுடன் இணைவது கட்டாயமானது என்றும் இதனை அந்நாட்டு மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் கூறியுள்ளார். தென் சீன கடல் பகுதியை போல தைவானையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானில் தன்னாட்சி நடைபெற்று வந்தாலும் தனி நாடாக அதை பிரகடனம் செய்யவில்லை. இந்நிலையில் சீனாவுடன் தைவான் இணைவது கட்டாயமானது என்று சீன அதிபர் ஸீ ஜின்பிங் கூறியுள்ளார். ஒரே நாடு இரு கொள்கையின் அடிப்படையில் அமைதியான முறையில் தைவானை இணைத்து கொள்ள தாம் விரும்புவதாகவும் ஜின்பிங் கூறியிருக்கிறார்.

மேலும் தைவான் இதற்கு சம்மதிக்காவிட்டால் படைகளை அனுப்பி வைப்பதற்கும் தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தைவானை தனி நாடாக அங்கீகரித்து சுதந்திரம் வழங்கினால் மக்களின் வாழ்வாதாரம் படு மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்றும் இதனை அந்த பகுதி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜின்பிங் தெரிவித்துள்ளார். தைவானின் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் Tsai Ing-wen தெரிவித்துள்ள நிலையில் சீன அதிபர் ஸீ ஜின்பிங் பேசியிருப்பது இரு தரப்பிற்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,fire ,Taiwan , Tsai Ing-wen ,Taiwan, China, chancellor,Xi jinpling, intimidation
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா