×

கஜா புயலுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன

வேதாரண்யம்: கஜா புயலுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளது. நாகை  மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம்  அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை  லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்துசெல்லும். ஆண்டுதோறும் ஆர்ட்டிக்  பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரைப் போக்கவும் உணவுக்காகவும் அங்குள்ள  பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கில் வந்துசெல்லும்.  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக்  நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகு மிகு  பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு  சேர்க்கும்.

மேலும் கொசு உள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்குநாரை,  சிவப்புகால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலைவாத்து, உள்நாட்டு  பறவைகளான செங்கால்நாரை, பர்மாவிலிருந்துவரும் சிறவி வகைகள்,  இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்ட்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்டிக்டேன் (ஆலா) இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள்  என 25 வகைப் பறவைகள் பல்லாயிரக்கணக்கில்
வந்துள்ளன. கடந்த மாதம் தாக்குதல் நடத்திய கஜா புயலால் இந்த சரணாலயத்தில் ஆயிரகணக்கான பறவைகள் இறந்து விட்டன. இனி இங்கு  பறவைகள் வருமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இப்போது கஜா புயலுக்கு பிறகு வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில்  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு குவிய தொடங்கியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Ghaja ,sanctuary ,Kodiyakkarai , Gajah Storm, Kodiyakkarai Sanctuary, Birds
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...