ரஃபேல் முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல்

புதுடெல்லி: ரஃபேல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.56 ஆயிரம் கோடியில் 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதலில் பெரியளவில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் எம்எல்.சர்மா, வினீத் தாண்டா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கடந்த மாதம் வெளியானது. அதில் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அதிரடியாகத் உத்தரவு பிறப்பித்தது.

ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனவும், ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்திற்கு இடமான அம்சங்கள் இல்லை எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கூறியது. இந்நிலையில் ரஃபேல் முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இதற்கான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: