×

சுட்டெரிக்கும் திருச்சி.. 50 ஆண்டுகளிலேயே இதுதான் உச்சம்… தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை: கடந்த 50 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலையாகத் திருச்சியில் நேற்று 105.44 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, தொடர்ந்து வெயில் நீடித்து வருகிறது. சராசரியாக 90 டிகிரி முதல் 100 டிகிரி வரை இருந்தது. பிப்ரவரி மாதத்தின் 2வது வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்னும் கடல் மட்ட வெப்பம் காரணமாக வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் வெப்பக் காற்று வீசி வருகிறது.கடலில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து போனதால், தரைப் பகுதியை நோக்கி வீசும் காற்றும் வெப்பமாக உள்ளது. இந்த வறண்ட வானிலை காரணமாகவும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 101 டிகிரி வரை இருந்த வெயிலின் தாக்கம் நேற்று மேலும் அதிகரித்து 105 டிகிரிக்கு எகிறியுள்ளது. இந்நிலையில், திருச்சியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று 105.44 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி 105.08 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையும் 1991ஆம் ஆண்டு மார்ச் 21ம் தேதி 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. திருச்சியில் அதிகபட்சமாக 1892ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி 107.96 பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியிருந்ததாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்….

The post சுட்டெரிக்கும் திருச்சி.. 50 ஆண்டுகளிலேயே இதுதான் உச்சம்… தமிழ்நாடு வெதர்மேன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Wetherman ,Chennai ,Trichy ,Tamil ,Nadu Wetherman Info ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...