×

நாடு முழுவதும் புத்தாண்டு தினத்தில் 70,000 ‘குவா... குவா’

புதுடெல்லி: புத்தாண்டு தினமான நேற்று மட்டும் இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையில், உலகத்திலேயே இதுதான் மிக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா அமைப்பின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசரக்கால நிதியம் (யூனிசெப்), நைஜீரியாவில் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3,95,072 குழந்தைகள் பிறக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 18 சதவீத  குழந்தைகள், அதாவது 69,944 குழந்தைகள் இந்தியாவில் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக  உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 16,000  குழந்தைகள் பிறக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனா 2வது இடம் பெறும். அங்கு புத்தாண்டு தினத்தில் 44,940 குழந்தைகள் பிறக்கும்.
அடுத்தபடியாக நைஜீரியாவில் 25,685 குழந்தைகளும், பாகிஸ்தானில் 15,112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 11,256 குழந்தைகளும், அமெரிக்காவில் 11,086 குழந்தைகளும், காங்கோவில் 10,053 குழந்தைகளும், வங்கதேசத்தில் 8,428 குழந்தைகளும் பிறப்பார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து யூனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் சார்லொட்டே கூறுகையில், ‘‘இந்த புத்தாண்டில் அனைத்து குழந்தைகளின் உயிர் வாழும் உரிமையை உறுதி செய்வது குறித்து உறுதிமொழி ஏற்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மருத்துவ செவிலியர்களுக்கு உரிய பயிற்சியும், உபகரணங்களும் வழங்கினால், பல ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் சாவை தடுக்க முடியும்’’ என்றார். கடந்த 2017ம் ஆண்டில், சுமார் 10 லட்சம்  குழந்தைகள், பிறந்தபோதே இறந்தன. மேலும், 25 லட்சம் குழந்தைகள் முதல் மாதத்திலேயே உயிரிழந்தன. பச்சிளம் குழந்தைகளின் சாவை தடுக்கக்கூடிய அளவில்தான் உள்ளன. ஏனெனில், உயிரிழந்த குழந்தைகளில் பல, பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல், குறை பிரசவம், நிமோனியா காய்ச்சல் போன்றவற்றினால்தான் இறந்துள்ளன. இதனால் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க யூனிசெப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Throughout the country, New Year's Day, 70,000 'Guva ... Guava'
× RELATED அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25,000 கோடி வங்கி மோசடி வழக்கு மூடப்பட்டது