×

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த வாலிபர் பலி வெளிமாவட்ட டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரத்தில், எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த கமுதி வாலிபரின் உடலை வெளிமாவட்ட டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு ரத்த தானம் வழங்கியவர் ராமநாதபுரம் மாவட்டம்,  கமுதி அருகே திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த மணி (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற இவருக்கும், கர்ப்பிணிக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணி உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவமனை டீன் மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் கொடுத்தார். மேலும் மதுரை அல்லாத மாவட்டத்தை சேர்ந்த  டாக்டர்களை கொண்டு, மணியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மருத்துவமனை  நிர்வாகம் தரப்பில் வீடியோ எடுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேறு மாவட்ட  டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் 2 நாட்களாக மணியின்  உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

ஐகோர்ட் கிளையில் மனு: இறந்த வாலிபரின் தாய், தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், ‘ மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் இல்லாமல்,  வேறு மாவட்டத்தைச் சேர்ந்த  தடயவியல் துறை மூத்த பேராசிரியர்கள் இருவரைக் கொண்டு பிரேத பரிசோதனை  செய்யவும், இதை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்’ என  கூறியிருந்தார்.மனுவை அவசர வழக்காக நேற்று விசாரித்த நீதிபதி  பி.புகழேந்தி, ‘மதுரை மருத்துவக்கல்லூரி பேராசிரியருடன், சிவகங்கை,  தேனி மற்றும் நெல்லை மாவட்ட மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களில் இருவரை கொண்ட  குழு, ஜன. 2ல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதை வீடியோவில் பதிவு  செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victim , Pregnant,victim,pregnant, pregnant,abortions
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி