×

நிவாரணம் வழங்காததால் தாசில்தார் மீது மக்கள் தாக்குதல்: ஒரத்தநாட்டில் 3 பேர் கைது

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே புயல் நிவாரணம் வழங்காததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் தாக்கியதில் தாசில்தார் காயமடைந்தார். இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். கஜா புயலின் கோரதாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சின்ன அம்மன்குடி கிராமமும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை அம்மன்குடி கிராமத்தில் நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக  ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் சென்றார். திருவோணம் போலீசார்,  அதிரடி படையினர் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். அப்போது புயல் பாதிப்பு நிவாரணம் வழங்கும் ெபயர் பட்டியலில் தங்களது பெயர் இல்லாதவர்கள்  ஒன்று திரண்டு தாசில்தார் ரமேஷை முற்றுகையிட்டனர். மேலும் எங்களுக்கு ஏன் நிவாரண பொருட்கள் வழங்கவில்லையென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதனை போலீசார் தடுத்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் ரமேஷை பொதுமக்கள் தாக்கினர். பதிலுக்கு தாசில்தார் ரமேசும் தாக்கினார். இந்த சம்பவத்தால் தாசில்தார் ரமேஷ் கழுத்தில் ரத்தகாயம் ஏற்பட்டது.  இதையடுத்து ஒரத்தநாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரமேஷ் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர். பின்னர் சின்ன செந்தில்குமார் (50), செல்வம் (65), ராஜா (3)  ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களை மிரட்டி பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tashkent , 3 people,arrested, Tashkent
× RELATED ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!