×

எச்.ஐ.வி. இளைஞர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு: உடற்கூராய்வு அறையில் ஏன் கேமரா பொருத்தக்கூடாது? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்த தானம் வழங்கிய எச்.ஐ.வி. இளைஞர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் தனது ரத்தத்தை தானமாக கொடுத்துள்ளார். தானமாக கொடுத்த பின்பு தான் வெளிநாடு செல்வதற்காக தனியார் மருத்துவமனையில் தனது ரத்தத்தை சோதித்த போது எச்.ஐ.வி. இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தனது ரத்தம் யாருக்கு ஏற்றப்பட்டது என தகவலை கண்டறிய அரசு மருத்துவமனையை அணுகினார். அது ஒரு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அவர் தன்னால் பிற உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக கூறி ராமநாதபுரம் வீட்டுக்கு சென்ற அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த இளைஞரின் அம்மா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று ஒரு அவசர வழக்கை தொடர்ந்தார்.

அதில் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது. விஷம் அருந்தி 2 நாட்கள் நல்ல நிலையில் உள்ள நிலையில் திடீரென நேற்று காலை இறந்துள்ளார். எனவே அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களை அல்லாத அரசு மருத்துவர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி புகழேந்தி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது அரசு தரப்பில் மதுரையில் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர்.

எனவே வேறு மருத்துவர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை என கூறினர். ஆனால் நீதிபதிகள் வேறு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு தமிழக அரசு பதலிலளிக்க வேண்டும், மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ உடற்கூறு மையங்களில் ஏன் நிரந்தரமாக வீடியோ பதிவு செய்ய கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : youth death ,anatomy room ,Government of Tamil Nadu , Anatomy, Camera, TN Government, HIV Youth
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...