×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24% குறைவு: சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் இந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரை பதிவான மழையின் அளவு 79 செ.மீ. இது இயல்பை விட 17  செ.மீ. குறைவு என்று அவர் தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 28 செ.மீ. இது இயல்பை விட 12 சதவீதம் குறைவு. தமிழகம் மற்றும் புதுவையின் முக்கிய மழைக்காலமான வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் பதிவான மழையின் அளவு 34 செ.மீ. இது இயல்பை விட 24 சதவீதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் 4 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 59 சதவீதம் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களும் இயல்பை விட 50 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. 5 மாவட்டங்களில் 40 முதல் 50 சதவீதத்திற்கு குறைவாக மழை பெய்துள்ளது. 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதத்திற்கு குறைவாக மழை பெய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இயல்பை விட 11 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் 15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால வானிலை அறிக்கையில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை என அவர் கூறினார். வடகிழக்கு பருவமழை காலத்தில் எல்நினோ நிகழ்வு நடக்கவில்லை. அடிப்படை வானிலை நிகழ்வு சாதகம் இல்லாமல் போனதால் மழை குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balachandran ,Tamil Nadu , 24% decrease,northeast monsoon,Tamil Nadu,Chennai,Weather Director,Balachandran
× RELATED கொரோனாவால் வளர்ந்த நாடுகளில்...