அருமனை அருகே கோயில் ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகள் பறிமுதல்

அருமனை: குமரி மாவட்டம் அருமனை அருகே கால்நடைகளுக்கு நேர்த்திக்கடன் செய்யும் புகழ்பெற்ற அளப்பங்கோடு ஈஸ்வர கால பூதத்தான் கோயில் உள்ளது. இங்கு மண்டல கால திருவிழாவின் நிறைவுநாளில் யானைகள் ஊர்வலம் நடத்தப்படும்.  இதையொட்டி, நேற்றுமுன்தினம் கேரளாவில் இருந்து அளப்பங்கோட்டுக்கு 3 யானைகள்  கொண்டுவரப்பட்டு ஊர்வலத்தில் பங்கேற்றன. ஊர்வலம் முடிந்து யானைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில் யானைகள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வனத்துறையினர் நெட்டா அருகே யானைகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து கேரள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆழியார் அருகே யானை தாக்கி சிறுமி பலி