×

இதுவரை போட்ட எல்லா தடைகளும் போல பிளாஸ்டிக் தடையும் பிசுபிசுக்குமா?

* சுற்றுச்சூழல் ஆபத்தை தடுக்க ஒரே வழி
* அரசு முழுவீச்சுடன் களத்தில் இறங்குமா?

பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் இன்றே கடைசி நாள். புத்தாண்டு தினமான நாளை முதல் இவற்றுக்கு தடை அமலாகிறது. பிளாஸ்டிக் பைகள், கப்கள், பாட்டில் என்று பல வகையில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளால் நம் சுகாதாரத்துக்கும் ேகடு; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் ஆபத்து என்று பல ஆண்டாகவே அறிந்தும், பேசியும் வருகிறோம். ஆனால், காய்கறி, ஓட்டல் பண்டங்கள், அசைவ உணவுப்பொருட்கள் என்று எல்லாவற்றையும் பிளாஸ்டிக் பைகளில் தான் வாங்கிக்கொள்கிறோம். ஓட்டல் சாம்பார், காபி என்று உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் பையில், கப்களில், தரமற்ற டப்பாக்களில் வாங்குவது வழக்கமாகி விட்டது.
கடந்த 10 ஆண்டாக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல சட்டவிதிகளை போட்டது. தமிழக அரசை பொறுத்தவரை, 2006ல் 40 மைக்ரானுக்கு கீழ் மெலிதான கேரி பேக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு தயாரிக்கவும் பயன்படுத்தவும் விட்டு விட்டனர். அடுத்து 51 மைக்ரானுக்கு கீழ் உள்ள பைகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலானது. அதுவும் பலன் அளிக்கவில்லை. காரணம் லஞ்சம் தான்.  நாளை முதல், பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பாட்டில்கள், ஷீட்கள், டம்ளர்கள், கப்கள் என ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசிவிடும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலாகிறது. ஹெல்மட், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது  உட்பட அரசு எவ்வளவோ தடை போட்டுள்ளது. ஆனால், எதுவும் எடுபடவில்லை. சுற்றுச்சூழலுக்கு வேகமாக நெருங்கும் ஆபத்துக்களை உணர்ந்தாவது அரசு முழுவீச்சில் களத்தில் இறங்க வேண்டும்; மக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதோ நான்கு திசைகளில் ஒரு அலசல்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bishop , plastic,ban,obstacles,
× RELATED தேசிய அளவிலான ஆக்சுவேரியல்...