×

கோயில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘திருக்கோயில் தொலைக்காட்சி’ அறநிலையத்துறை முடிவு

சென்னை: கோயில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏதுவாக திருக்கோயில் தொலைக்காட்சி என்ற பெயரில் சேனல் தொடங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,190 கோயில்கள் உள்ளன. இதில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில், விழாக்காலங்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த நிகழ்வுகளை காண கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். கோயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால், அந்த நிகழ்வுகளை பொதுமக்களால் காண முடிவதில்லை. குறிப்பாக, முதியோர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற அச்சத்தில், பலரும் கோயிலுக்கு வருவதில்லை.

இந்நிலையில், கோயில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏதுவாக திருக்கோயில் தொலைக்காட்சி என்ற பெயரில் சேனல் ஒன்றை தொடங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, பெரிய கோயில்களில் நடைபெறும் நிகழ்வுகளை யுடியூப்பில் பதிவு செய்து தற்போது அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து அரசு கேபிள் டிவி மூலமாக திருக்கோயில் தொலைக்காட்சி என்ற பெயரில் உள்ளூர் சேனல்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கோயில்களில் நடைபெறும் நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் வீடியோ கலைஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அந்தந்த கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை தலைமை அறிவுரை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அறநிலையத்துறை சார்பில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘சாட்டிலைட் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். எனவேதான், அந்தந்த உள்ளூர்கள் மூலம் திருக்கோயில் தொலைக்காட்சி என்ற பெயரில் சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக, அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சேனல் வரும் பட்சத்தில் முதியோர்கள் வீட்டில் இருந்தபடியே கோயில்களில் நடக்கும் பல்வேறு காலகட்ட சிறப்பு பூஜைகளை கண்டுகளிக்க முடியும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tirukoil , Tirukoil TV,Broadcast,temple,programs,Endowment Department
× RELATED திருக்கோயில் பணியாளர்களுக்கான...