×

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் தொடர்ச்சியாக 4வது வெற்றி

லான்செஸ்டன்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியுடனான பிக் பாஷ் டி20 லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.அரோரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஹரிகேன்ஸ் முதலில் பந்துவீசியது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. கார்ட்ரைட் 29, ஆஷ்டன் ஏகார் 32, கோல்டர்  நைல் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. ஹரிகேன்ஸ் பந்துவீச்சில் ரைலி மெரிடித் 3, பாக்னர், ஷார்ட் தலா 2, ரோஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஹரிகேன்ஸ் 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து வென்றது. கேப்டன் மேத்யூ வேட் 24, ஷார்ட் 34, மெக்டெர்மாட் 3, பெய்லி 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அலெக்ஸ் டூலன் 41 ரன்,  மிலென்கோ 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த ஹரிகேன்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hobart , Hobart, Hurricanes, 4th consecutive, win
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி