×

இலக்கை எட்ட வலியுறுத்தல், கமிஷன் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் 60% பேர் மன அழுத்தத்தால் உயிரிழப்பு: சங்கத்தினர் குற்றச்சாட்டு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 60 சதவீதம் ஊழியர்கள் மன அழுத்தத்தின் காரணமாகவே ஆண்டுதோறும் உயிரிழப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதை தடுக்க முறையான மருத்துவ  பரிசோதனை மையங்களை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 4,800 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 26,463 சில்லறை விற்பனை பணியாளர்கள் உள்ளனர்.  இவர்களில் 7,287 மேற்பார்வையாளர்களும், 15,532  விற்பனையாளர்களும், 3,644 உதவி விற்பனையாளர்களும் அடங்குவர். இவர்கள் தொகுப்பு ஊதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். இ்ந்நிைலயில் நாள் ஒன்றுக்கு 2 பேர் மன அழுத்தம் காரணமாகவே இறக்கும் சூழல் நிலவி வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் இருந்து பகிர் தகவல் வெளியாகியுள்ளது. இதை நிர்வாகமும், அரசும் முறையாக  கண்டுகொள்வதில்லை. ஊழியர்களின் மன அழுத்தம் மற்றும் உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: எந்த வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படாமல் கடந்த 15 ஆண்டுகளாக ஊழியர்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஊழியர்கள் மன உளைச்சலுடன் பணியாற்றும் நிலை உள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள்  திருமணமாகியிருந்தால் அவர்களுடைய பெற்றோர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நிதி உதவி வழங்க இயலாது என சமீப காலமாக டாஸ்மாக் நிறுவனம் மறுப்பது சரியல்ல. ஈ.எஸ்.ஐ மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை  சிகிச்சை செய்ய உச்சபட்ச வரம்பின்றி நிதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான மதுபான கடைகள் 150 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு கொண்டவையாகும். இதனால், இடநெருக்கடியில் வேலை செய்யும்  நிலை உள்ளது.

இதேபோல், ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 350 பேர் வரையில் மன அழுத்தம் காரணமாக இறக்கின்றனர். இவர்களுக்கு சராசரி வயது 40 ஆகும். இது சம்பந்தமாக அமைச்சர் மற்றும் மேலாண்மை  இயக்குனருக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார்களா என்பதை கண்டறிய மருத்து பரிசோதனை மையங்களை அமைத்து சிகிச்சை அளிக்க  வேண்டும். இதுபோன்று நாங்கள் கூறும் ஊழியர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு கோரிக்கைக்கும் அரசும், நிர்வாகமும் இதுவரையில் செவி சாய்க்கவில்லை. மன அழுத்தம் காரணமாக மதுப்பழக்கம் இல்லாத ஊழியர்களும் அதற்கு  அடிமையாகின்றனர். ஊழியர்களை வேலைக்கு சேர்க்கும் போது மேற்பார்வையாளர்களுக்கு வயது வரம்பு 35 எனவும், விற்பனையாளர்களுக்கு 28 எனவும், உதவி விற்பனையாளர்களுக்கு 40 எனவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், 50 முதல் 60  சதவீத ஊழியர்கள் பெரும்பாலும், தங்களின் பணிக்காலத்திற்கள் மன அழுத்தம் காரணமாக உயிரிழக்கின்றனர். இதற்கு அரசு முறையான நடவடிக்கையை எடுத்து, ஊழியர்களின் நலனை காக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmakers , Emphasize, target, ,Taskmill employees,
× RELATED திருக்கழுக்குன்றம் - திருப்போரூர்...