×

மானாமதுரையில் அவலம்: புது பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு...பயணிகள் அவதி

மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் ஏறமுடியாத அளவிற்கு டூவீலர்களை நிறுத்துவதால் பயணிகள் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.மானாமதுரை மேல்கரையில் மதுரை ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் புது பஸ் ஸ்டாண்டு அமைந்துள்ளது. இங்கிருந்து ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் செல்வதால் மானாமதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து புது பஸ் ஸ்டாண்டு வந்து தான் பஸ் ஏறுகின்றனர். இவ்வாறு வரும் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வருபவர்களும் பஸ்கள் நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை குறுக்கும் மறுக்குமாக நிறுத்துகின்றனர். இதனால் பஸ் நிற்குமிடத்திற்கு பதிலாக சிறிது தூரம் தள்ளி நிறுத்தப்படுகிறது.

தற்போது பஸ்களில் இறங்கும் படி குறுகலாகவும், உயரமாகவும் இருப்பதால் நடைமேடையில் இறங்கவேண்டிய முதியவர்கள், கர்ப்பிணிகள் இறங்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் தொலைதூரம் செல்லும் பஸ்கள் சிறிதுநேரமே நிற்பதால் டூவீலர்களின் இடிபாடுகளுக்கு இடையே பஸ் ஏற பயணிகள் சிரமப்படுகின்றனர்.இது குறித்து பஸ் பயணி சேகர் கூறுகையில்,‘‘ புது பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்டு இருந்தும் பயணிகள் அதில் நிறுத்தாமல் பஸ் பயணிகள் இறங்கும் நடைமேடையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பயணிகள் பஸ்களில் ஏறவே, இறங்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது. சைக்கிள் ஸ்டாண்டில் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறப்படுவதாலும் அங்கு போதிய இடவசதி இல்லாமல் இருப்பதாலும் பஸ் ஸ்டாண்டினுள் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க முடியவில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகம், போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிற்கும் இடங்களில் டூவீலரை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,Manamadurai , Manamadurai, bus stand, tuweiler, passenger
× RELATED அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை...