×

பிலிப்பைன்சில் பெரும்சோகம்: நிலநடுக்கத்தை தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவால் 22 பேர் உயிரிழப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிமலை வெடித்து சிதறி, அதன் குழம்புகள் கடலில் விழுந்ததில் பூமித்தட்டுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சுனாமியில், 400க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நில அதிர்வு உருவானது. இந்நிலையில், பிலிப்பைன்சில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தெற்குப் பகுதியில் உள்ள மைண்டனாவ் தீவுப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுக் கோலில் 6.9 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள் கடுமையாக அதிர்ந்தன. வீடுகளில் இருந்த மக்கள், அலறியடித்து, நடுரோட்டிற்கு வந்தனர். இதனால் சுனாமி உருவாகும் அபாயம் இருந்தது. இதனால் மக்கள் மேடான பகுதிக்கு விரைந்தனர். ஆனால், சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்பு திரும்ப பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால், அண்டை நாடான இந்தோனேசியாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பைகால் பகுதியில் 16 பேரும், கிழக்கு விசாயாஸ் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 22 பேர் பலியாகி உள்ளனர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Flooding ,earthquake ,Philippines ,landslide , Philippines, earthquake, flood, landslide
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்