×

கோவையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை: சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் இயற்ற பா.ம.க வலியுறுத்தி வருகிறது. கோவையில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெய்வேலியில் 3-வது சுரங்கம் தோண்டும் முடிவை கைவிட வலியுறுத்தபடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் பா.ம.க பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சிவகாசி பட்டாசு ஆலையை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டில் 7 தமிழர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க பா.ம.க வலியுறுத்தி வருகிறது. கோவை பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மற்றும் அன்புமணி பங்கேற்றுள்ளனர். விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரங்கள் அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்க பாமக கோரிக்கை விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படடும் என கோவையில் நடைபெறும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு பொதுக்குழுவில் அதிகாரம் அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் இந்திய நலனை கருதி கூட்டணி அமைக்கப்படும் என ராமதாஸ் கூறியுள்ளார். விவசாயிகள் மற்றும் இளைஞர் நலனை கருத்தில் கொண்டு பாமக முடிவெடுக்கும் என தெரிவித்தார். தகுந்த நேரத்தில் உரிய முடிவை பாமக அறிவிக்கும் எனவும் கூறினார். வதந்திகள் மற்றும் பொய்யான கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,General Panchayat Meeting , 13 resolutions,implemented,General Panchayat,Meeting,Coimbatore
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு