×

மெல்போர்ன் 3வது டெஸ்ட் : இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி

மெல்போர்ன்:  3வது டெஸ்டில்,  இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுக வீரர் மயாங்க் அகர்வால் 76, புஜாரா 106, கேப்டன் கோஹ்லி 82, ரகானே 34, பன்ட் 39 ரன் விளாசினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா,  66.5 ஓவரில் 151 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.  இந்திய பந்துவீச்சில் பும்ரா 15.5 ஓவரில் 4 மெய்டன் உட்பட 33 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 2, இஷாந்த், ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் இந்தியா 292 ரன் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்தியா 106 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனையடுத்து ஆஸி. அணி 2வது இன்னிங்சில் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக சவாலான இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 2-வது இன்னிங்சை துவக்கிய ஆஸி அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் அந்த அணி 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் அபாரமாக ஆடி அரை சதமடித்தார். இந்திய  அணி சார்பில் ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஷம்மி 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

இதன்மூலம் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ம் தேதி சிட்னி மைதானத்தில் நடக்க உள்ளது.அந்த போட்டியில் இந்திய அணி டிராசெய்தால் தொடரை வெல்லும், அதேசமயம் ஆஸ்திரேலியா அணி வென்றால் தொடர் சம நிலையில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Melbourne ,match ,India , India , 2-1 up,big win
× RELATED மைதான் இந்தி விமர்சனம்