×

வ.உ.சிதம்பரனாருக்கு தண்டனை வழங்கிய குதிரை வண்டி கோர்ட் மீண்டும் பொலிவு பெறுகிறது

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு தண்டனை வழங்கிய குதிரை வண்டி கோர்ட் மீண்டும் பொலிவு பெறுகிறது. இதற்காக, ₹6 கோடி நிதி கேட்டு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அறிக்கை அனுப்பி வைத்துள்ளது.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாநகரின் மையப்பகுதிகளில் 1870ம் ஆண்டு குதிரை வண்டி கோர்ட் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் ஆரம்பகாலத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்ற கட்டிடமாக செயல்பட்டு வந்தது. பின்னர் சப்கோர்ட், முனிசிபல் கோர்ட் ஆக இருந்தது. அதன்பிறகு இந்த கட்டிடத்தில் தொழிலாளர் நீதிமன்றம், மதுவிலக்கு தனி நீதிமன்றம், கூட்டுவு சங்க வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றமும், நடமாடும் ெமாபைல் கோர்ட், 4 ஜூடிசியல் கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட் என மொத்தம் 8 நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு இந்த கட்டிடத்தில் குதிரை வண்டி கோர்ட் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கட்டிடங்களில் செயல்பட்டு வந்த நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கோர்ட்டில் தான் சுதந்திர போராட்ட வீரர் வஉ.சிதம்பரனாருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வஉசிதரம்பரனார் செக்கிழுக்க இந்த கோர்ட் தான் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த கட்டிடங்களில் செயல்பட்டு வந்த அனைத்து நீதிமன்றங்களும் கடந்த 2000க்கு பிறகு வேறு இடத்திற்கு இடம் மாறியது. அதன்பிறகு இந்த கட்டிடங்களில் முறையாக பராமரிக்கப்படாததால், பாழடைந்து கிடக்கிறது. சமூக விரோத செயல்களின் கூடாரமாக இந்த இடம் மாறியது. இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து குதிரை வண்டி கோர்ட்டை புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்பேரில், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன் தலைமையில் பாரம்பாரிய கட்டிடங்களை பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பொறியாளர் அடங்கிய குழுவினர் பழமை மாறாமல் புனரமைப்பு பணி மேற்ெகாள்ளும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பேரில் ₹6 கோடி மதிப்பில் இப்புனரமைப்பு பணிக்கு செலவாகும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய கோரி பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Horse riding court ,V.C. , V. Chidambaranar, Horse, Court, Bright
× RELATED கோடை வெயிலை சமாளிக்க கோவை வ.உ.சி....