×

பதஞ்சலி நிறுவனம் லாபத்தின் ஒரு பகுதியை உள்ளூர் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு வழங்க வேண்டும்: உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம்

டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனம், லாபத்தின் ஒரு பகுதியை உள்ளூர் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபா ராம்தேவுக்கு சொந்தமான திவ்யா பார்மசி நிறுவனம்தான், பதஞ்சலி பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த திவ்யா பார்மசி நிறுவனம் ஈட்டிய 421 கோடி ரூபாய் லாபத்தில் 2 கோடி ரூபாயை, மூலப்பொருட்கள் விளைவித்துக் கொடுக்கும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பகிர்ந்து வழங்குமாறு, உத்தரகாண்ட் பல்லுயிர் பெருக்க வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, திவ்யா பார்மஸி நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதை தள்ளுபடி செய்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின்படி, லாபத்தின் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு வழங்குமாறு உத்தரவிட பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு உரிமை உள்ளது என்று அறிவுறுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Patanjali ,Uttarakhand High Court , Patanjali ,part of the profit,local farmers,people,Uttarakhand High Court
× RELATED -ஒன்றிய, பகுதி புதிய நிர்வாகிகள் நியமனம்