×

முதுமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி பாதையில் கண்காணிப்பு அவசியம்

ஊட்டி : புத்தாண்டு, பள்ளி அரையாண்டு விடுமுறையை  முன்னிட்டு சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு அதிக அளவு செல்லும் நிலையில், கல்லட்டி மலைப்பாதையில் கண்காணிப்பை அதிகரிப்பது அவசியமாகும்.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளன. செங்குத்தான மலைகளில் குறுகிய, அதே சமயம் கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலைகளாக உள்ளன. இதனால், சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கத் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

   மேலும்,இச்சாலையில் வாகனங்கள் இயக்க தடை விதித்துள்ள போதிலும், போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு இப்பாதையில் சென்று விபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் இப்பாதையில் நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த வாலிபர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பின், இவ்வழித்தடத்தில் வெளியூர் வாகனங்கள் செல்ல போலீசார் கட்டுப்பாடு விதித்தனர்.அதேபோல், உள்ளூர் வாகனங்கள் வந்துச் செல்லவும், அந்த வாகனங்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையில் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.

இதனால், இப்பாதையில் விபத்துஅதிகளவு குறைந்துள்ளன. தற்போது பள்ளி விடுமுறையை கொண்டாட அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டி வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள ரிசார்ட்டுக்களுக்கு செல்கின்றனர். எனவே, இச்சாலையில் விபத்துக்களை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்துவது மட்டுமின்றி, வெளியூர் வாகனங்கள் செல்லாமல் இருக்க, கல்லட்டி மலைப்பாதையை இணைக்கும் அனைத்து பாதைகளையும் கண்காணிப்பது அவசியம் என சமூகஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

     ஊட்டி: பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை வந்த நிலையில், ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இங்குள்ள ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் சேர்ந்துள்ள  நிலையில் கடந்த ஒரு வாரமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை  மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஊட்டி அருகேயுள்ள பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது.

ஊட்டி நகருக்குள் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வந்து செல்கின்றன. பார்க்கிங்கிற்கு போதிய இட வசதி இல்லாத நிலையில், நகரின் முக்கிய சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குளிர் வாட்டுவதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் மற்றும் சால்வைகளை அதிகளவு வாங்கி செல்கின்றனர். இதனால் வெம்மை ஆடை விற்பனையும் தற்போது ஊட்டியில் சூடு பிடித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mudumalai ,Kallatti , ooty ,Tourist,Kallati Road ,School Leave,Masinakudi
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...